ஹிஜாப் அணிய தடை விதித்தது ஏமாற்றமளிக்கிறது- அமெரிக்க வெளியுறவுத்துறை

கர்நாடக ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை குழுவின் தலைவர் கிரிகோரி மீக்ஸ் வருத்தம் தெரிவித்துள்ளார்.
Image courtesy: Twitter Gregory Meeks
Image courtesy: Twitter Gregory Meeks
Published on

வாஷிங்டன்,

ஹிஜாப் அணியும் விவகாரம் தொடர்பாக கடந்த சில மாதங்களாக கர்நாடகாவில் முஸ்லிம் மாணவிகள் போராட்டம் நடத்தி வந்தனர். ஹிஜாப் அணிவதற்கு அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து முஸ்லிம் மாணவிகள் கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தனர்.

இந்த வழக்கில் கர்நாடக ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி, நீதிபதிகள் கிருஷ்ண தீட்ஷித்.ஜே.எம். காஜி ஆகியோர் அடஙகிய அமர்வு நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கியது.

அதில் "ஹிஜாப் அணியும் விவகாரத்தில் அரசு பிறப்பித்த உத்தரவு சட்ட விதிகளுக்கு உட்பட்டு உள்ளது. இந்த விவகாரத்தில் அரசை கேள்வி கேட்கும் அதிகாரம் இல்லை. ஹிஜாப் என்பது முஸ்லிம் சமூகத்தில் ஒரு அவசியமானதாக கருத முடியாது.

எனவே, பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளுக்கு வரும் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்துவர அனுமதி இல்லை,. அனைத்து மாணவர்களும் ஓன்றே என்பதை வலியுறுத்தும் வகையில் சீருடைகளை அணிந்து வரவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த தீர்ப்புக்கு அமெரிக்க வெள்ளை மாளிகையின் வெளியுறவுத்துறை குழுவின் தலைவர் கிரிகோரி மீக்ஸ் வருத்தம் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர், "மதம் மற்றும் கல்விக்கான உரிமை ஆகியவற்றிற்கு இடையே கருத்துச் சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் நீதிமன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது.

அமெரிக்கா, இந்தியா அல்லது எந்த நாடாக இருந்தாலும் சிறுபான்மை சமூகங்கள் எவ்வாறு நடத்தப்படுகின்றன என்பதை பொறுத்தே ஒரு சமூகத்தின் உண்மையான அளவுகோல் மதிப்பிடப்படுகிறது" என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com