

வாஷிங்டன்
இந்தியாவின் அமெரிக்க தூதர் கென்னத் ஜஸ்டரை இந்திய வெளியுறவு செயலாளர் எஸ்.ஜெயசங்கர் வெள்ளிக்கிழமை சந்தித்து இரு நாடுகளுக்கும் இடையே இருதரப்பு பிரச்சினைகள், குறித்து விவாதித்தார்.
தீவிரவாதத்தை தடுக்க "தேவையான நடவடிக்கைகளை" எடுக்கவில்லை. அமெரிக்கா பாகிஸ்தானுக்கு இராணுவ உதவியைக் குறைப்பதற்கான நடவடிக்கை எடுத்து உள்ளது. ஏற்கனவே இந்த விவகாரத்திற்கு பாகிஸ்தான் இந்தியாவை குறை கூறி வருகிறது. அமெரிக்கா இந்தியாவின் குரலில் பேசிவருவதாக குற்றம்சாட்டி உள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஹெதர் நவார்ட், கூறும் போது,
பாகிஸ்தானுக்கான தேசிய ராணுவ நிதி உதவி நிறுத்தப்பட்டுள்ளதை உறுதி செய்கிறேன். தலீபான், ஹக்கானி அமைப்பினர் மீது பாகிஸ்தான் அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கிறவரை இது நீடிக்கும். அந்த இயக்கங்கள் பயங்கரவாத இயக்கங்கள், பிராந்தியத்தை சீர்குலைக்கின்றன. அமெரிக்க படையினரை குறிவைத்து தாக்குகின்றன. பாகிஸ்தானுக்கு ராணுவ தளவாடங்கள் வழங்கப்படமாட்டாது. நிதி உதவிகளும் அளிக்கப்படமாட்டாது.
பாகிஸ்தான் அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தபோதும்கூட, தலீபான்களும், ஹக்கானி அமைப்பினரும் அங்கு புகலிடம் தேடிக்கொள்கின்றனர். அவர்கள் ஆப்கானிஸ்தானை சீர்குலைக்கவும், அமெரிக்க கூட்டுப்படையினரை தாக்கவும் சதி செய்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிலையில் பாகிஸ்தான் - இந்தியாவிடையே பேச்சுவார்த்தை நடைபெற்று உள்ளது.
#WashingtonDC / #UnitedStates / #KennethJuster / #ForeignSecretary #Jaishankar / #bilateralissues