இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தத்தில் இருப்பது என்ன? விவரங்களை வெளியிட்டது அமெரிக்கா

அமெரிக்கா – இந்தியா இடையே முதல்கட்ட வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான கூட்டறிக்கையை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது
இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தத்தில் இருப்பது என்ன? விவரங்களை வெளியிட்டது அமெரிக்கா
Published on

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் 2-வது முறையாக பதவி ஏற்ற பிறகு, பல்வேறு அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறார். அந்த வகையில், உலக நாடுகளுக்கு பரஸ்பர வரி விதிப்பில் அவர் மிகவும் கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதை பார்க்க முடிகிறது.அந்த வகையில், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்கள் மீதும் 25 சதவீதம் கூடுதல் வரியை கடந்த ஆண்டு (2025) ஆகஸ்ட் மாதம் 1-ந் தேதி அமெரிக்கா அமல்படுத்தியது. இந்தியா–அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரி விதிப்பதாக கூறி, அதற்கு பதிலடியாக இந்த நடவடிக்கையை முன்னெடுத்ததாக அப்போது சொல்லப்பட்டது.

Also Read
‘அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தம் இந்திய விவசாயிகளை பாதிக்கும்’ - மல்லிகார்ஜுன கார்கே
இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தத்தில் இருப்பது என்ன? விவரங்களை வெளியிட்டது அமெரிக்கா

அதன் பின்னர், இந்தியா தொடர்ந்து ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தாத காரணத்தால், அந்த அதிருப்தியின் காரணமாக மேலும் 25 சதவீதம் அபராதம் விதித்து, மொத்தமாக 50 சதவீதமாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27-ந்தேதி உயர்த்தப்பட்டது. இதனால் இந்திய ஏற்றுமதியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.இந்த நிலையில், கடந்த 2-ம் தேதி அமெரிக்க அதிபர் டிரம்ப் – பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக பேசினர். இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு, இந்தியா – அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் முடிவானது. இந்திய பொருட்களுக்கான பரஸ்பர வரியை 25 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைத்து டிரம்ப் அறிவிப்பு வெளியிட்டார். டிரம்பின் இந்த அறிவிப்பை பிரதமர் மோடியும் வரவேற்றார்.

Also Read
2026-ம் ஆண்டில் இந்தியா-பாகிஸ்தான் இடையே மீண்டும் மோதல் ஏற்படலாம் - அமெரிக்கா கணிப்பு
இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தத்தில் இருப்பது என்ன? விவரங்களை வெளியிட்டது அமெரிக்கா

இந்த நிலையில், அமெரிக்கா – இந்தியா இடையே முதல்கட்ட வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான கூட்டறிக்கையை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது. அதில், ஒப்பந்தத்தில் உள்ள சாராம்சங்கள் இடம் பெற்றுள்ளன. அதன் விவரம் வருமாறு: பரஸ்பர மற்றும் இருதரப்புக்கும் நன்மை பயக்கும் வர்த்தகம் குறித்த இடைக்கால ஒப்பந்தத்திற்கு அமெரிக்காவும் இந்தியாவும் ஒரு முடிவை எட்டியுள்ளன. அமெரிக்கா – இந்தியா வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளை இது மீண்டும் உறுதிப்படுத்துகிறது. அமெரிக்காவின் அனைத்து தொழில்துறைப் பொருட்கள், உணவு மற்றும் விவசாயப் பொருட்களுக்கான வரிகளை இந்தியா நீக்கும் அல்லது குறைக்கும்

ஜவுளி, ஆடை, தோல், காலணிகள் உட்பட இந்தியாவில் இருந்து வரும் பொருட்களுக்கு அமெரிக்கா 18 சதவீத பரஸ்பர வரியை விதிக்கும். ரஷிய எண்ணெய் இறக்குமதியை முற்றிலுமாக குறைக்க இந்தியா உறுதியளித்ததைத் தொடர்ந்து, இந்தியாவில் இருந்து வரும் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட 25 சதவீத கூடுதல் அபராத வரியை அமெரிக்கா திரும்பப் பெறுகிறது. அடுத்த 10 ஆண்டுகளில் பாதுகாப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்காக அமெரிக்காவுடன் ஒரு ஒப்பந்தத்தை இந்தியா உறுதியளித்துள்ளது. பொதுமருந்துகள், ரத்தினங்கள் மற்றும் வைரங்கள், விமான உதிரிப்பாகங்கள் உள்ளிட்ட சில தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்களுக்கான சுங்க வரிகளை, ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்ட பிறகு, முழுமையாக நீக்கவும் அமெரிக்கா சம்மதித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com