ஈரான் துறைமுக நகரம் மீது தாக்குதல்: 5 பேர் பலி

மத்திய கிழக்கு போரை நிறுத்த பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்து வருகிறது.
ஈரான் துறைமுக நகரம் மீது தாக்குதல்: 5 பேர் பலி
Published on

மத்திய கிழக்கில் நடந்து வரும் போரில் ஈரான் அமெரிக்கா- இஸ்ரேல் இணைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்தநிலையில், ஹார்முஸ் ஜலசந்தி அருகே உள்ள ஈரானின் துறைமுக நகரம் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இதில் 5 பேர் பலியாகி உள்ளனர்.

இதற்கிடையே மத்திய கிழக்கு போரை நிறுத்த பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்து வருகிறது. போர் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தைகளுக்காக சவுதி அரேபியா, எகிப்து, துருக்கி ஆகிய நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள் பாகிஸ்தானுக்கு சென்றனர்.

இந்தநிலையில் அமெரிக்கா - ஈரான் இடையே போர் நிறுத்தம் கொண்டு வருவது தொடர்பாக பாகிஸ்தான் உள்பட 4 நாடுகளின் மந்திரிகள் ஆலோசனை கூட்டம் இன்று பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் தொடங்கியது. இந்த கூட்டம் நாளையுடம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com