

கடந்த வெள்ளியன்று ஜப்பான் நாட்டின் மீது வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை மேற்கொண்டதை அடுத்து அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை செயலர் மாற்றிஸ் குறித்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
தென் கொரியாவுக்கான பாதுகாப்புத்துறைச் செயலருடன் பேச்சுவார்த்தை நடத்திய மாற்றிஸ், தங்களது அணுஆயுத திட்டத்தை கொரியா தீபகற்பத்தில் அறிமுகப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
ஆனால் வடகொரியாவுக்கு எதிரான யுத்த வியூகங்கள் என்ன என்பது குறித்த தகவல்களை பகிர்ந்துகொள்ள அவர் மறுத்துள்ளார்.
இருப்பினும் மிகவும் துல்லியமான தற்கால சூழலுக்கு ஏற்ப வியூகங்களை வகுத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதுவரை வடகொரியாவுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் ஐ.நா. மன்றம் ஆகியவை ஒன்றிணைந்து மேற்கொள்ளப்பட்ட பொருளாதார அழுத்தங்கள் திட்டமிட்டப்படி செயற்பாட்டுக்கு வந்துள்ளதாகவும் மாற்றிஸ் தெரிவித்துள்ளார்.
அடுத்த மாதம் விமானம் தாங்கி கப்பல் ஒன்றை கொரியா தீபகற்பம் நோக்கி அனுப்பி வைக்க உள்ளதாகவும் மாற்றிஸ் உறுதி அளித்துள்ளார்.