ஈராக்கில் அமெரிக்க பத்திரிகையாளர் கடத்தல் - அதிர்ச்சி சம்பவம்

அமெரிக்காவை சேர்ந்த பெண் பத்திரிக்கையாளர் ஜெல்லி கிட்டில்சன்.
ஈராக்கில் அமெரிக்க பத்திரிகையாளர் கடத்தல் - அதிர்ச்சி சம்பவம்
Published on

பாக்தாத்,

அமெரிக்காவை சேர்ந்த பெண் பத்திரிக்கையாளர் ஜெல்லி கிட்டில்சன். இவர் உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் போர் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை களத்திற்கே நேரில் சென்று செய்தி சேகரித்து பத்திரிக்கையில் செய்தி வெளியிட்டு வந்தார்.

இந்நிலையில், ஜெல்லி கிட்டில்சன் ஈராக்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு, மத்திய கிழக்கு போர் குறித்து செய்தி சேகரித்துக்கொண்டிருந்தார். அவர் நேற்று ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அல் சடோன் பகுதியில் உள்ள சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது காரில் வந்த மர்ம நபர்கள் பட்டப்பகலில் பத்திரிக்கையாளர் ஜெல்லி கிட்டில்சனை காரில் கடத்தி சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக ஈராக் பாதுகாப்புப்படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரான் ஆதரவு பெற்ற பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் ஜெல்லி கிட்டில்சனை கடத்தி சென்றதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com