உலகில் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் நாடுகளின் பட்டியலில் பின்தங்கிய அமெரிக்கா

உலகில் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா 9-வது இடத்தில் இருந்து 11-வது இடத்திற்கு பின்தங்கியது.
உலகில் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் நாடுகளின் பட்டியலில் பின்தங்கிய அமெரிக்கா
Published on

ஒரு நாட்டிலுள்ள மொத்த தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் அதில் பணிபுரியும் அறிவியல் மற்றும் பொறியியல் துறை ஊழியர்களையும் செயல்பாட்டையும் அடிப்படையாகக் கொண்டு ப்ளூம்பெர்க் இதழ் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியலில் தென் கொரியா முதலிடம் பிடித்துள்ளது, அந்நாட்டின் எலக்ட்ரானிக் நிறுவனங்கள் அதிக மதிப்பு மிக்கதாகவும், அதிக அளவு காப்புரிமைகளை கொண்டதாகவும் விளங்குகிறது. தினம் தினம் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவதால் இந்த பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.

கடந்த வருடம் 9 இடத்தில் இருந்த அமெரிக்கா இந்த வருடம் 11-வது இடத்திற்கு சென்று விட்டது. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையில் காலத்திற்கு ஏற்ப புதிய வேலைவாய்ப்புகள் போதுமான அளவு உருவாக்காததே இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பத்தாம் இடத்தில் உள்ள இஸ்ரேல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறையில் ஆச்சரியப்படும் வகையில் வளர்கிறது. அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தை விட குறைந்த அளவு மக்கள் தொகையை இஸ்ரேல் கொண்டிருந்தாலும் சுமார் 400 ஸ்டார்ட் அப் மூலம் அமெரிக்காவை விட இரண்டரை சதவிகிதமும் ஐரோப்பாவை காட்டிலும் 30 சதவிகிதமும் அதிக மூலதனத்தை ஈட்டுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com