

வாஷிங்டன்,
சோமாலியா நாட்டின் பேல்டோக்லே நகரில் அமெரிக்க ராணுவத்தின் படை தளம் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு வந்த அல் ஷபாப் பயங்கரவாதிகள் கொண்ட குழு ஒன்று வாகனம் ஒன்றில் இருந்த சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்றை நேற்று வெடிக்க செய்து தாக்குதல் நடத்தியது.
இதற்கு பழிக்கு பழியாக மற்றும் தற்காப்புக்காக அமெரிக்க ராணுவம், அல் ஷபாப் பயங்கரவாதிகளை இலக்காக கொண்டு 2 வான்வழி தாக்குதல்களை நடத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் 10 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளனர். வாகனம் ஒன்றும் அழிக்கப்பட்டு உள்ளது என அமெரிக்க ராணுவ அறிக்கை தெரிவித்துள்ளது.