அமெரிக்கா: ஜே.டி. வான்ஸ் வீடு மீது தாக்குதல் நடத்திய நபர் கைது


அமெரிக்கா:  ஜே.டி. வான்ஸ் வீடு மீது தாக்குதல் நடத்திய நபர் கைது
x

அமெரிக்கா ஜே.டி. வான்ஸ் வீடு மீது தாக்குதல் நடத்திய நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது.

நியூயார்க்,

அமெரிக்காவின் ஒஹியோ மாகாணத்தில் சின்சின்னாட்டி நகரில் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் வீடு அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த வீடு மீது மர்ம நபர் ஒருவர் இன்று தாக்குதல் நடத்தி உள்ளார்.

அவர் சுத்தியலை கொண்டு தாக்கியதில் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து விழுந்துள்ளன. எனினும், இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. சம்பவத்தின்போது, வான்ஸ் மற்றும் அவருடைய குடும்பத்தினர் யாரும் வீட்டில் இல்லை என கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தில் அந்த நபரை போலீசார் தீவிர தேடுதலுக்கு பின்னர் கைது செய்துள்ளனர். இந்த தாக்குதலுக்கான காரணம் என்னவென தெரிய வரவில்லை. அதுபற்றி விசாரிக்கப்பட்டு வருகிறது. அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது.

எனினும், அதுபற்றியும் விசாரிக்கப்பட்டு வருகிறது. வான்சின் மீது தாக்குதல் நடத்தியதில் பாதிக்கப்பட்ட வீட்டின் ஜன்னலின் புகைப்படம் வலைதளத்தில் பகிரப்பட்டு உள்ளது.

அவர் வான்சை இலக்காக கொண்டு தாக்குதல் நடத்தினாரா? அல்லது அவரது குடும்பத்தினரை தேடி வந்தாரா? என்பது விசாரணைக்கு பின்னரே தெரிய வரும். எனினும், அதுபற்றி அமெரிக்க உளவு துறை எந்த தகவலையும் அளிக்கவில்லை.

1 More update

Next Story