தீவிரவாதத்தை விட ரஷ்யாவும், சீனாவும் தான் அமெரிக்காவிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளன- பென்டகன்

ரஷ்யா மற்றும் சீனா நாடுகள் தங்களின் வீட்டோ அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதாக, அமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சகம் குற்றஞ்சாட்டியுள்ளது.#USMilitary #Pentagon
தீவிரவாதத்தை விட ரஷ்யாவும், சீனாவும் தான் அமெரிக்காவிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளன- பென்டகன்
Published on

வாஷிங்டன்

தீவிரவாதத்தை விட ரஷ்யாவும், சீனாவும் தான் அமெரிக்காவிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகமான பெண்டகன் தெரிவித்துள்ளது.

மேலும், இது குறித்து அமெரிக்காவின் பாதுகாப்பு துறை அமைச்சரான ஜிம் மேட்டிஸ் கூறுகையில்,

உலக வல்லரசாவற்கான போட்டியால், சர்வதேச அரசியலில் நிச்சயமற்ற தன்மை அதிகரிக்கும் என்ற ஜார்ஜ் ஷூல்ட்ஸின் கூற்று மீண்டும் உண்மையாகி உள்ளது.வடகொரியா, ஈரான் போன்ற நாடுகளில் ரஷ்யாவும், சீனாவும் சர்வாதிகாரிகளை ஆதரிக்கின்றன. இதற்காக வீட்டோ அதிகாரத்தை அவை தவறாக பயன்படுத்துகின்றன. ஆனால், ரஷ்யா மற்றும் சீனாவை விட அமெரிக்க ராணுவம் நவீனமிக்க வலுவானது என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com