6 நாளில் 2வதாக பறந்த மர்மப் பொருள்: சுட்டு வீழ்த்திய அமெரிக்கா

ஆறு நாட்களுக்கு பிறகு இரண்டாவது முறையாக அமெரிக்க இராணுவம் இந்த மர்மமான பொருளை சுட்டு வீழ்த்தி உள்ளது.
6 நாளில் 2வதாக பறந்த மர்மப் பொருள்: சுட்டு வீழ்த்திய அமெரிக்கா
Published on

அலாஸ்கா

அமெரிக்காவின் அலாஸ்கா வான்வெளியில் பறந்து கொண்டிருந்த மர்மபொருளை அமெரிக்க இராணுவம் சுட்டு வீழ்த்தியது. இதனை தேசிய பாதுகாப்பு கவுன்சில் அதிகாரி ஜான் கிர்பி வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கடந்த சனிக்கிழமையன்று சீன உளவு பலூனை எப்-22 வை சுட்டு வீழ்த்திய பின்னர், ஆறு நாட்களுக்கு பிறகு இரண்டாவது முறையாக அமெரிக்க இராணுவம் இந்த மர்மமான பொருளை சுட்டு வீழ்த்தி உள்ளது.

இது குறித்து வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி கூறியதாவது:-

அந்த மர்ம பொருள் எங்கிருந்து வந்தது. அதன் நோக்கம் என்னவென்றெல்லாம் எங்களுக்கு இன்னும் உறுதியாகவில்லை. ஆனால் 40 ஆயிரம் அடி உயரத்தில் மர்ம பொருள் பறப்பது விமான போக்குவரத்துக்கு அச்சுறுத்தல் என்பதால் அதனை நாங்கள் சுட்டு வீழ்த்தினோம்.

அதிபர் ஜோ பைடன் உத்தவின் பேரில் நாங்கள் அதனை சுட்டு வீழ்த்தினோம். கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்க வான்வெளியில் பறந்த சீன உளவு பலூனைவிட இது அளவில் சிறியதுதான். இது ஒரு காரின் அளவில் தான் இருந்தது. இது அரசுக்கு சொந்தமானதா அல்லது ஏதேனும் கார்ப்பரேட் நிறுவனத்துக்கு சொந்தமானதா? அதன் நோக்கம் தான் என்னவென்பது இன்னும் உறுதியாகவில்லை" என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com