அமெரிக்க ராணுவம் உலகில் தலைசிறந்ததாக விளங்குகிறது; டிரம்ப் பெருமிதம்

ஈரான் அணு ஆயுதம் பெறுவதை நாம் அனுமதிக்க முடியாது என்று டிரம்ப் கூறினார்.
அமெரிக்க ராணுவம் உலகில் தலைசிறந்ததாக விளங்குகிறது; டிரம்ப் பெருமிதம்
Published on

வாஷிங்டனில் நடந்த விருந்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதாவது: அமெரிக்காவில் மட்டும் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்கவில்லை. மற்ற அனைத்து நாடுகளில் நடக்கும் வன்முறைகளையும் நீங்கள் பார்க்க வேண்டும். வேறு நாட்டைச் சேர்ந்த ஒருவரிடம் நான் பேசிக் கொண்டிருந்தேன். உலகம் முழுவதும் எண்ணற்ற அரசியல் தலைவர்கள் படுகொலை செய்யப்படுவதாக அவர் கூறினார்.

வர்த்தகத்திலும், ராணுவத்திலும் நாங்கள் உலகை வழிநடத்துகிறோம். அமெரிக்க ராணுவம் உலகின் தலைசிறந்ததாக விளங்குகிறது. ஈரான் அணு ஆயுதம் பெறுவதை நாம் அனுமதிக்க முடியாது. ஒரு வேளை அவர்கள் அணு ஆயுதம் பெற்றால், அதனுடன் ஒப்பிடும்போது மற்ற அனைத்தும் ஒன்றுமே இல்லை. அவர்கள் சற்றும் தயக்கமின்றி அணு ஆயுதங்களை பயன்படுத்துவார்கள்.

நம்மால் அதை செய்ய முடியாது. என் பதவிக் காலத்தில் இது நடந்திருக்கக் கூடாது. இதுபோன்ற செயல்களை செய்யும் போது நாங்களும் ஒரு இலக்காகி விடுகிறோம். அதை செய்யாமல் இருந்திருந்தால் நான் இலக்காக இருந்திருக்க மாட்டேன் என்று நினைக்கிறேன். நான் இதில் பெருமை கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com