ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்கா ஏவுகணை தாக்குதல் - 7 பேர் உயிரிழப்பு

பனா கடார் நகரை குறிவைத்து அமெரிக்க போர்கப்பல்கள் ஏவுகணைகளை வீசி சரமாரி தாக்குதல் நடத்தின.
சனா,
இஸ்ரேல்-பாலஸ்தீனத்துக்கு இடையிலான போரில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக ஏமன் நாட்டில் இருந்தவாறு செயல்படும் ஹவுதி கிளர்ச்சியாளர்களை சமாளிப்பதற்காக, அமெரிக்க நாட்டின் போர் கப்பல்கள் செங்கடலில் நிறுத்தப்பட்டு கண்காணிப்பு பணி மேற்கொண்டு வருகின்றன.
இந்த நிலையில் ஏமன் நாட்டில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அதிகமுள்ள பகுதியான பனா கடார் நகரை குறிவைத்து அமெரிக்க போர்கப்பல்கள் ஏவுகணைகளை வீசி சரமாரி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் 7 பேர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 30 பேர் படுகாயம் அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
Related Tags :
Next Story






