அமெரிக்காவில் கடற்படை வீரர்கள் ‘டிக்-டாக்’ செயலி பயன்படுத்த தடை

அமெரிக்காவில் கடற்படை வீரர்கள் ‘டிக்-டாக்’ செயலி பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கடற்படை வீரர்கள் ‘டிக்-டாக்’ செயலி பயன்படுத்த தடை
Published on

நியூயார்க்,

சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமான பேஸ்புக்-குக்கு பிறகு டிக்-டாக் செயலியை உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். சீனாவில் உருவாக்கப்பட்ட டிக்-டாக் செயலியில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக அமெரிக்கா கூறிவருகிறது.

இந்த நிலையில் அமெரிக்க அரசால் அந்நாட்டு கடற்படை வீரர்களுக்கு அளிக்கப்பட்ட செல்போன்களில் டிக்-டாக் செயலியை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அமெரிக்க கடற்படையின் பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டு உள்ள பதிவில், பாதுகாப்பு விதிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் டிக்-டாக் செயலி உள்ளது. எனவே அரசால் அளிக்கப்பட்டுள்ள செல்போன்களில் இருந்து அந்த செயலியை உடனடியாக நீக்க வேண்டும். இல்லையெனில், கடற்படையின் இன்ட்ராநெட் சேவையால் அந்த செல்போன்கள் முடக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த மாதம் அமெரிக்க ராணுவவீரர்கள் டிக்-டாக் செயலி பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com