"அதிகரித்து வரும் குற்றம்-பயங்கரவாதம்" இந்தியா வரும் அமெரிக்கர்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

"அதிகரித்து வரும் குற்றம் மற்றும் பயங்கரவாதத்தை" அடையாளம் காட்டி இந்தியா வரும் அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. #newtraveladvisory
"அதிகரித்து வரும் குற்றம்-பயங்கரவாதம்" இந்தியா வரும் அமெரிக்கர்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
Published on

வாஷிங்டன்

இந்தியா உள்பட வெளிநாடுகளுக்கு செல்பவர்களுக்காக புதிய பயண ஆலோசனை வழிகாட்டி ஒன்றை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. இது பயனர் நட்பு அடிப்படையிலான ஒரு புரிந்துணர்வு ஒன்று முதல் நான்கு அளவை அடிப்படையாக கொண்டது என அதிகாரி ஒருவர் கூறி உள்ளார்.

இதில் இந்தியா 2-வது நிலை வரிசையில் உள்ளது. (கூடுதல் எச்சரிக்கையுடன் இருத்தல்) பாகிஸ்தான் 3-வது லெவல் வரிசையில் உள்ளது. ( பயணத்தை மறுபரிசீலனை செய்தல்)

1-வது நிலை சாதாரண முன்னெச்சரிக்கை நடவடிக்கையைச் செய்ய பயணிகளுக்கு ஆலோசனை கூறுகிறது. 4-வது நிலை ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளுக்கு சுற்றுலா செல்லவேண்டாம். இப்போது ஒவ்வொரு நாடும் இந்த முறையிலான அடிப்படையில் ஒரு பயண ஆலோசனைகளை கொண்டிருக்கிறது. முந்தைய அனைத்து ஆலோசனை வழிகாட்டிகள் தற்போது மாறிவிட்டது.

இந்த மேம்பாடுகள் அமெரிக்க குடிமக்களுக்கு உலகளாவிய, தெளிவான, நம்பகமான பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புத் தகவல்களை வழங்கும். என அமெரிக்கா கூறி உள்ளது.

நிலை 2 இல் இந்தியாவை வைத்துள்ள அமெரிக்க துறையினர் "அதிகரித்து வரும் "குற்றம் மற்றும் பயங்கரவாதத்தை" அடையாளம் காட்டி எச்சரிக்கை செய்துள்ளனர்.

ஆயினும், அமெரிக்கர்கள் ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு பயணம் செய்யக்கூடாது, கிழக்கு லடாக் மற்றும் லேயைத் தவிர்த்து விடவும் "ஆயுத மோதல்களுக்கான சாத்தியம்" காரணமாக இந்தியா-பாக்கிஸ்தான் எல்லையில் 10 மைல் தூரத்திற்குள் செல்லக்கூடாது என்றும் கூறி உள்ளது.

ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு முழுமையான பயண ஆலோசனை அளவை வழங்கும்போது, ஒரு நாட்டிற்குள் குறிப்பிட்ட இடங்கள் அல்லது பகுதிகளுக்கு ஆலோசனை வழங்கும்.

இந்தியாவில் கற்பழிப்பு குற்றங்கள் மிக வேகமாக வளர்ந்து வரும் குற்றங்களில் ஒன்றாகும். பாலியல் தாக்குதல் போன்ற வன்முறை, சுற்றுலா தலங்கள் மற்றும் பிற இடங்களில் நடக்கிறது, என புதிய இந்தியா பயணம் ஆலோசனையில் கூறப்பட்டு உள்ளது.

#UnitedStates #Washington #newtraveladvisory

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com