நாசாவின் கல்பனா சாவ்லா விண்கலம் விண்ணில் பாய்ந்தது

விண்வெளியில் அமைந்துள்ள சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு கல்பனா சாவ்லா விண்கலம் பொருட்களை கொண்டு செல்கிறது.
நாசாவின் கல்பனா சாவ்லா விண்கலம் விண்ணில் பாய்ந்தது
Published on

விண்வெளியில் அமைந்துள்ள சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பொருட்களை கொண்டு செல்வதற்காக, அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா சார்பில் சிக்னஸ் கார்கோ விண்கலம் அனுப்ப முடிவு செய்யப்பட்டது. இந்திய வம்சாவளியை சேர்ந்த விண்வெளி வீராங்கனையான கல்பனா சாவ்லா பெயர் சூட்டப்பட்ட இந்த விண்கலம் வியாழக்கிழமை இரவு அனுப்ப முடிவு செய்யப்பட்டது.

விர்ஜினியாவில் இருந்து விண்வெளி பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப நிறுவனமான நார்த்ரூப் கிரம்மானின் அன்டரேஸ் ராக்கெட், விண்கலத்தை சுமந்துகொண்டு புறப்பட தயாரானது. ஆனால், கடைசி நேரத்தில் தரைக் கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு கண்டறியப்பட்டது. இதனால் ராக்கெட் ஏவுவது ஒத்திவைக்கப்பட்டது.

கோளாறை சரிசெய்யும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். கோளாறு சீர் செய்யப்பட்டதையடுத்து வியாழக்கிழமை இரவு உள்ளூர் நேரப்படி 9.38 மணியளவில் விண்ணில் ஏவப்பட்டது. இரண்டு நாள்களுக்குப் பிறகு இந்த விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com