

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் இந்த மாத தைைலமப்பதவி அமெரிக்காவி டம் இருக்கிறது. எனவே மரபுப்படி இந்த மாதத்துக்கான தற்காலிக பணித் திட்டங்களை அமெரிக்க பிரதிநிதி வெளியிட்டார். இதில் ஈரானுக்கு எதிராக பொருளாதார தடை விதிக்கும் வகையில் 1737 தடை கமிட்டியின் செயல்பாடுகளும் அடங்கி இருந்தன.
அமெரிக்காவின் இந்த பணித்திட்டத்துக்கு சீனா மற்றும் ரஷியா நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. தங்கள் வீட்டோ அதிகா ரத்தை பயன்படுத்தி அதை நிராகரித்தன. இதனால் அந்த பணித்திட்டம் ஏற்க முடியாமல் போனது. அமெரிக்காவால் முன்மொழியப்பட்ட தற்காலிக வேலைத்திட்டத்தில் ஈரான் தொடர்பான 1737 தடைகள் குழுவின் பணிகள் குறித்த விளக்கமும் அடங்கியிருந்ததால், அதை நிராகரிக்க வேண்டிய கட் டாயத்தில் தள்ளப்பட்டோம் என ரஷியா கூறியுள்ளது.