வெள்ளை மாளிகைக்கு வருமாறு உக்ரைன் அதிபருக்கு ஜோ பைடன் அழைப்பு..!!

அமெரிக்கா தொடர்ந்து உக்ரைனுக்கு ஆதரவளிப்பதன் முக்கியத்துவம் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Image Courtacy: AFP
Image Courtacy: AFP
Published on

வாஷிங்டன்,

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை வெள்ளை மாளிகைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். இந்த சந்திப்பின் போது, இரு தலைவர்களும் உக்ரைனின் எரிசக்தி தேவைகள் குறித்தும், கியேவுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிப்பதன் முக்கியத்துவம் குறித்தும் விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதொடர்பாக வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரீன் ஜீன்-பியர் வெளியிட்ட அறிக்கையின்படி, நடந்து வரும் போரில் ரஷியாவை எதிர்த்துப் போராடும் உக்ரைன் மக்களுக்கு ஆதரவளிப்பதற்கான அமெரிக்காவின் "அசைக்க முடியாத அர்ப்பணிப்பை" நிரூபிக்க ஜோ பைடன், ஜெலென்ஸ்கியை வெள்ளை மாளிகைக்கு அழைத்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com