2 வான்கோழிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்

நன்றி தெரிவிக்கும் நாளை முன்னிட்டு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் 2 வான்கோழிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கினார்.
2 வான்கோழிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்
Published on

வாஷிங்டன்,

நன்றி தெரிவிக்கும் நாள் என்பது ஒரு வட அமெரிக்க பாரம்பாரிய விடுமுறை நாள் ஆகும். இன்றைய காலகட்டத்தில் அரசியல், சமூக, கலாச்சார, சமய முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் விதமாக ஐக்கிய அமெரிக்க நாடுகளில் நன்றி தெரிவிக்கும் நாள் கொண்டாடப்படுகிறது.

அதிலும் குறிப்பாக நன்றி தெரிவிக்கும் நாளன்று அமெரிக்கர்கள் வான்கோழி கறியை உணவாக உண்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இருப்பினும் அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருப்பவர்கள், நன்றி தெரிவிக்கும் நாளுக்கு முன்பு 2 வான்கோழிகளுக்கு மட்டும் பொதுமன்னிப்பு அளிப்பது அங்கு பாரம்பரியமாக பின்பற்றப்பட்டு வருகிறது.

அவ்வாறு பொதுமன்னிப்பு வழங்கப்படும் 2 வான்கோழிகள், நாட்டிலுள்ள விலங்குக் காப்பகங்களுக்குப் பரிசாக அளிக்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு நன்றி தெரிவிக்கும் நாளை முன்னிட்டு ஜெல்லி மற்றும் பீனட் பட்டர் என பெயரிடப்பட்ட 2 வான்கோழிகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பொதுமன்னிப்பு அளித்தார். வெள்ளை மாளிகையில் நடைபெற்ற இந்த சுவாரஸ்ய நிகழ்வு அங்கிருந்தவர்களிடையே கலகலப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com