அமெரிக்க அதிபர் டிரம்ப் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து உள்ளார்; வெள்ளை மாளிகை தகவல்

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து உள்ளார் என வெள்ளை மாளிகை தெரிவித்து உள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து உள்ளார்; வெள்ளை மாளிகை தகவல்
Published on

வாஷிங்டன்,

உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடுகள் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. கொரோனா தொற்று பாதிப்புக்கு மத்தியில் அந்நாட்டில் வரும் நவம்பர் 3ம்தேதி அதிபர் தேர்தலும் நடக்க உள்ளது. இந்த தேர்தலுக்காக டிரம்ப் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டநிலையில், அதிபரின் நெருங்கிய ஆலோசகர் ஹோப் ஹிக்ஸ் என்பவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப் ஆகியோர் தனிமைப்படுத்திக்கொண்டு கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர். கொரோனா தொற்று பரிசோதனை முடிவில் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப் ஆகிய இருவருக்கும் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இதன்பின் அந்நாட்டு ராணுவ மருத்துவமனையில் டிரம்ப் அனுமதிக்கப்பட்டார். 4 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் திங்கள் கிழமை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வெள்ளை மாளிகை திரும்பினார். தொடர்ந்து அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதுபற்றி அதிபர் டிரம்பின் ஊடக செயலாளர் கெய்லேய் மைக்எனானியிடம், வெள்ளை மாளிகை மருத்துவர் சீன் கான்லே கூறும்பொழுது, அதிபர் டிரம்புக்கு சமீபத்தில் நடந்த அடுத்தடுத்த கொரோனா பரிசோதனைகளின் முடிவில் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என தெரிய வந்துள்ளது என்ற தகவலை பகிர்ந்து கொள்கிறேன்.

தொடர்ந்து நடந்த ஆன்டிஜென் பரிசோதனைகளின் நெகடிவ் முடிவுகள், வைரசின் தாக்கம், ஆர்.என்.ஏ. மற்றும் பி.சி.ஆர். அளவீடுகள் உள்ளிட்ட கூடுதல் மருத்துவ மற்றும் ஆய்வக தரவுகள் ஆகியவற்றுடன் வைரசின் மீது நடந்து வரும் ஆய்வு ஆகியவற்றின்படி, டிரம்ப் வைரசின் பாதிப்பில் இருந்து விடுபட்டு உள்ளார் என தெரிய வந்துள்ளது.

இதேபோன்று, வைரசின் தொற்றை நீக்குவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பற்றிய நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் வழிகாட்டு ஒழுங்குமுறைகளின்படி, வைரசை பிறருக்கு பரவ செய்ய கூடிய அளவுக்கு தாக்கம் ஏற்படுத்த கூடியவராக அதிபர் டிரம்ப் இல்லை என்றும் தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com