அமெரிக்காவில் அதிபர் தேர்தல்; வடகொரியா நிகழ்த்திய ஏவுகணை சோதனை

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள சூழலில், வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது.
அமெரிக்காவில் அதிபர் தேர்தல்; வடகொரியா நிகழ்த்திய ஏவுகணை சோதனை
Published on

பியாங்யாங்,

கொரிய தீபகற்பத்தில் வடகொரியா - தென்கொரியா இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது. தன் எதிரி நாடுகளாக கருதும் தென் கொரியா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவை சீண்டும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. மேலும், தங்கள் நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் வந்தால் தாக்குதல் நடத்துவோம் எனவும் வடகொரியா எச்சரித்து வருகிறது.

இந்த சூழலில், அமெரிக்காவில் இன்று அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு மொத்தம் 50 மாகாணங்கள் உள்ள நிலையில், இந்திய நேரப்படி இன்று (05-11-2024) மாலை 4.30 மணி முதல் 7.30 மணிக்குள் ஒவ்வொரு மாகாணங்களாக வாக்குப்பதிவு தொடங்கி நாளை கலை 5.30 மணிக்கு நிறைவடைய உள்ளது.

அமெரிக்காவில் தேர்தல் தொடங்குவதற்கு சில மணி நேரங்களே உள்ள நிலையில், வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது. கிழக்கு கடல் பகுதியை நோக்கி பல்வேறு குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை வடகொரிய ராணுவம் சோதனை செய்ததாக ஜப்பான் மற்றும் தென் கொரியா அரசுகள் தெரிவித்துள்ளன. அந்த ஏவுகணைகள் சுமார் 400 கி.மீ. தூரம் வரை பாய்ந்து சென்று கடலில் விழுந்ததாக கூறப்படுகிறது. அமெரிக்காவில் தேர்தல் நடைபெற உள்ள சூழலில், வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியிருப்பது சர்வதேச அரசியலில் பேசுபொருளாகியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com