ஈரானில் இருந்து பெட்ரோலிய பொருட்கள் வாங்க ஒப்பந்தம்: இந்திய நிறுவனத்திற்கு தடை விதித்த அமெரிக்கா!

ஈரானில் இருந்து பெட்ரோலிய பொருட்களை வாங்க ஒப்பந்தம் செய்த பன்னாட்டு நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.
ஈரானில் இருந்து பெட்ரோலிய பொருட்கள் வாங்க ஒப்பந்தம்: இந்திய நிறுவனத்திற்கு தடை விதித்த அமெரிக்கா!
Published on

வாஷிங்டன்,

ஈரானில் இருந்து பெட்ரோலியம் மற்றும் பெட்ரோலியம் சார்ந்த பொருட்களை வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்த இந்திய நிறுவனத்திற்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.

இந்த நிலையில், அமெரிக்க கருவூலத் துறை வெளியிட்டுள்ள தகவலில், இந்திய நிறுவனம் உட்பட சர்வதே அளவிலான பன்னாட்டு நிறுவனங்கள், ஈரானிய நிறுவனமான டிரைலையன்ஸ் மூலம் மில்லியன் டாலர் மதிப்புள்ள மெத்தனால் மற்றும் எண்ணெய் உள்ளிட்ட பெட்ரோலியம் சார்ந்த பொருட்களை வாங்கியுள்ளது என்று தெரிவித்துள்ளது.

இதனையடுத்து இந்தியாவை சேர்ந்த பெட்ரோ கெமிக்கல் நிறுவனம், திபால்ஜி பெட்ரோகெம் பிரைவேட் லிமிடெட் மற்றும் அதனுடன் சேர்ந்து ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஹாங்காங்கில் உள்ள சில நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடை விதித்துள்ளது.

ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை 2019ல் இந்தியா நிறுத்திவிட்டது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com