அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ இன்று இந்தியா வருகை

அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ இன்று வருகை தருகிறார்.
அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ இன்று இந்தியா வருகை
Published on

புதுடெல்லி,

அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ இன்று இந்தியா வருகை தருகிறார். இந்த பயணத்தின் போது, இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுப்ரமணியம் ஜெய்சங்கரை சந்தித்து பேச உள்ளார்.

இந்தியா- அமெரிக்கா இடையேயான பொருளாதார உறவில் சில கசப்புணர்வுகள் சமீப காலமாக அதிகரித்து வந்துள்ள நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

வரும் 28, 29 ஆகிய தேதிகளில் நடைபெறும் ஜி 20 நாடுகளின் கூட்டமைப்பின் போது, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை பிரதமர் மோடி சந்திக்க இருக்கும் நிலையில், இந்த சந்திப்பு நடைபெறுவது கவனிக்கத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com