இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக எரிக் கார்செட்டி நியமனம் - செனட் சபை ஒப்புதல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக எரிக் கார்செட்டியை நியமனம் செய்வதற்கு செனட் சபை ஒப்புதல் அளித்தது.
இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக எரிக் கார்செட்டி நியமனம் - செனட் சபை ஒப்புதல்
Published on

வாஷிங்டன்,

இந்தியாவுக்கான அமெரிக்க துதராக, எரிக் கார்செட்டியை நியமனம் செய்வதற்கு அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது.

முன்னதாக இந்தியாவுக்கான அமெரிக்க துதராக எரிக் கார்செட்டியை, 2021ம் ஆண்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பரிந்துரைத்தார். பல்வேறு காரணங்களால் இவரது பெயர் நிராகரிக்கப்பட்டு வந்த சூழலில், மீண்டும் எரிக் கார்செட்டியின் பெயர் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. இதற்கான ஓட்டுப் பதிவு இன்று நடந்தது.

அப்போது, எரிக் கார்செட்டியின் நியமனத்துக்காக செனட் 52-42 என வாக்களித்தது. இதையடுத்து, செனட் சபையின் முழு ஓட்டெடுப்புக்கு எரிக் கார்செட்டியின் பெயர் பரிந்துரைக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்மூலம் ஏரிக் கார்செட்டி இந்தியாவுக்கான அமெரிக்க துதராக நியமிக்கப்படுவது உறுதியாகியுள்ளது.

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் முன்னாள் மேயரான எரிக் கார்செட்டி, 52, அமெரிக்காவின் 100 ஆண்டு கால வரலாற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இளம் மேயர் என்ற பெருமையை பெற்றவர். ஜனநாயக கட்சியின் உறுப்பினரான இவர், மேயர் உட்பட பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.

இதுதொடர்பாக கார்செட்டி ஒரு அறிக்கையில், "இன்றைய முடிவால் நான் மகிழ்ச்சியடைகிறேன், இது நீண்ட காலமாக காலியாக உள்ள ஒரு முக்கியமான பதவியை நிரப்புவதற்கான தீர்க்கமான மற்றும் இருதரப்பு முடிவாகும். இப்போது கடின உழைப்பு தொடங்குகிறது. இந்த செயல்முறை முழுவதும் நம்பிக்கை மற்றும் ஆதரவிற்காக அதிபர் ஜோ பைடன் மற்றும் வெள்ளை மாளிகை மற்றும் இடைகழியின் இருபுறமும் உள்ள அனைத்து செனட்டர்களுக்கும் - அவர்கள் எனக்கு வாக்களித்தாலும் இல்லாவிட்டாலும் - அவர்களின் சிந்தனைமிக்க பரிசீலனைக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இந்தியாவில் எங்களது முக்கியமான நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் எனது சேவையைத் தொடங்க நான் தயாராகவும் ஆர்வமாகவும் இருக்கிறேன்" என்று அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com