இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக செர்ஜியோ கோர் நியமனம்: செனட் சபையில் அங்கீகாரம்

இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதராக செர்ஜியோ கோரை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நியமித்துள்ளார்.
இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக செர்ஜியோ கோர் நியமனம்: செனட் சபையில் அங்கீகாரம்
Published on

வாஷிங்டன்,

இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 50 சதவீத வரிவிதித்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டார். மேலும் ரஷியா உடனான பொருளாதார உறவை துண்டிக்குமாறும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனிடையே அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள இந்தியர்களை கை விலங்கிட்டு நாடு கடத்தியது பெரும் விவாதப்பொருளாக மாறியது.

இத்தகைய சூழ்நிலைக்கு நடுவே இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதராக செர்ஜியோ கோரை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நியமித்துள்ளார்.

ஏற்கனவே இதுகுறித்தான அறிவிப்பை அவர் வெளியிட்டிருந்தநிலையில் நேற்று செனட் சபையில் இதற்கான அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இந்தியாவின் தூதராகவும், தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான சிறப்பு தூதராக செர்ஜியோ கோர் பணியாற்ற உள்ளார். தற்போது ஜனாதிபதி அலுவலக பணியாளர்கள் நியமன தலைவராக உள்ள அவர் டிரம்பின் தீவிரமான ஆதரவாளர் என்பதும் அவருடைய வலது கரம் என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com