அமெரிக்கா: 700 பில்லியன் டாலர் பாதுகாப்பு செலவின மசோதா செனட்டில் நிறைவேற்றம்

அமெரிக்க செனட் சபையில் 700 பில்லியன் டாலர் மதிப்புள்ள பாதுகாப்பு செலவின மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
அமெரிக்கா: 700 பில்லியன் டாலர் பாதுகாப்பு செலவின மசோதா செனட்டில் நிறைவேற்றம்
Published on

வாஷிங்டன்

வரும் 2018 ஆம் ஆண்டிற்கான இந்த செலவின மசோதாவில் இந்தியாவிற்கு முன்னுரிமையும், பாகிஸ்தானிற்கு நிபந்தனையுடன் கூடிய நிதியுதவியும் இடம் பெற்றுள்ளது.

இந்த மசோதா அதிபர் டிரம்ப் தனது ஆப்கன், தெற்காசிய கொள்கைகளை வெளியிட்டப் பிறகு நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆப்கனில் சண்டை நடைபெற்றப்போது உதவிய பாகிஸ்தானிற்கு வழங்கப்பட வேண்டிய தொகையான 700 மில்லியன் டாலர்களுக்கு இம்மசோதாவில் வகை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதில் சரிபாதித் தொகை பாகிஸ்தான் தீவிரவாதத்திற்கு எதிரான தனது நடவடிக்கைகளை தொடர்ந்து எடுக்க வேண்டும் என்ற நிபந்தனையில் பேரில் வழங்கப்படும்.

பாகிஸ்தான் தனக்கு அளிக்கப்படும் ராணுவ உதவிகளை கொண்டு பலூச் உட்பட பல இனங்களை ஒடுக்கவே பயன்படுத்துகிறது என்று அமெரிக்கா குற்றஞ்சாட்டுகிறது.

அத்துடன் ஒசாமாவை கண்டுபிடிக்க உதவிய டாக்டர் ஷகீல் அஃப்ரிதியை பாகிஸ்தான் அரசு தவறான முறையில் சிறையில் அடைத்துள்ளது. அவர் ஒரு சர்வதேச ஹீரோ. அவரை சிறையில் அடைத்திருப்பதால் பாகிஸ்தானிற்கும், அமெரிக்காவிற்கும் இடையிலான உறவிற்கு கடுமையான தடைகளை உருவாக்குகிறது என்றும் இந்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com