6 முஸ்லீம் நாடுகளுக்கு விசா கட்டுப்பாட்டில் தளர்வு கொண்டு வந்தது அமெரிக்கா

6 முஸ்லீம் நாடுகளுக்கு விசா கட்டுப்பாட்டில் அமெரிக்க தளர்வு செய்துள்ளது.
6 முஸ்லீம் நாடுகளுக்கு விசா கட்டுப்பாட்டில் தளர்வு கொண்டு வந்தது அமெரிக்கா
Published on

வாஷிங்டன்,

அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பின் 6 முஸ்லிம் நாட்டைச் சேர்ந்த குடிமக்கள் அமெரிக்காவுக்குள் நுழையத் தடை விதித்து உத்தரவிட்டார். இதற்கு உலகம் முழுவதிலும் இருந்து கண்டனங்கள் எழுந்த நிலையில், அமெரிக்காவின் கீழ் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. இந்த தடையை எதிர்த்து டிரம்ப் நிர்வாகம் அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.

இந்த மேல் முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்ச நீதிமன்றம், 'இந்தத் தடை உத்தரவு மூலம், அமெரிக்கர்களுடன் ஏதாவது ஒரு வகையில் தொடர்பில் இருக்கும் வெளிநாட்டினருக்கு எந்தப் பாதிப்பும் இருக்கக் கூடாது. ஆனால், மற்ற வெளிநாட்டினருக்கு இந்தத் தடை உத்தரவு பொருந்தும்.' என்று கூறியுள்ளது.

இந்த நிலையில், விசா கட்டுப்பாட்டில் அமெரிக்கா தளர்வு கொண்டு வந்துள்ளது. நெருங்கிய உறவினரை பார்க்க, தொழில் ரீதியாக அமெரிக்கா வர 6 நாட்டினருக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மிக நெருங்கிய குடும்ப உறவுகளான, பெற்றோர்கள், மனைவி, குழந்தைகள், மகன், மகள், மருமகன், மருமகள், சகோதரரின் மகன் உள்ளிட்ட நெருங்கிய உறவினர்கள் மற்றும் தொழில் ரீதியாக வருபவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com