வடகொரியாவின் ஏவுகணை சோதனைக்கு பதிலடி: அமெரிக்காவுடன் இணைந்து பயிற்சி நடத்திய தென்கொரியா

போர் விமானங்களை இடைமறித்து தாக்கும் பயிற்சியை அமெரிக்காவுடன் இணைந்து தென்கொரியா நடத்தியது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சியோல்,

வடகொரியா தனது தொடர் ஏவுகணை சோதனையால் கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை ஏற்படுத்துகின்றது. இதனால் தங்களது பாதுகாப்பு கருதி தென்கொரியாவும், ஜப்பானும் அமெரிக்காவுடன் இணைந்து கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபடுகின்றன. இது தங்களுக்கு எதிரான போர் ஒத்திகை என கருதும் வடகொரியா இந்த பயிற்சியை கைவிட வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனை பொருட்படுத்தாத தென்கொரியா அமெரிக்காவுடன் இணைந்து மீண்டும் கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபடுகிறது. அப்போது போர் விமானங்களை இடைமறித்து தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளில் ஈடுபட்டதாக தென்கொரிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com