அமெரிக்கா: காப்பகத்தில் கத்திக்குத்து தாக்குதல்; 12 பேர் காயம்

காப்பகத்தில் முதல் நாள் இரவில் அமைதியாக இருந்த அவர், அடுத்த நாள் வன்முறையில் இறங்கியுள்ளார்.
அமெரிக்கா: காப்பகத்தில் கத்திக்குத்து தாக்குதல்; 12 பேர் காயம்
Published on

சேலம்,

அமெரிக்காவின் சேலம் நகரில் காப்பகம் ஒன்று உள்ளது. சொந்த பந்தங்கள் இல்லாதவர்களுக்கு புகலிடம் அளிக்கும் வகையில் இந்த காப்பகம் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், போர்ட்லேண்ட் நகரில் இருந்து டெஸ்சூட்ஸ் கவுன்டி பகுதிக்கு டோனி லாட்ரெல் வில்லியம்ஸ் (வயது 42) என்பவர் பயணம் செய்துள்ளார். அப்போது வழியில் சேலம் நகரில் இறங்கிய அந்நபர், இந்த காப்பகத்திற்கு சென்றுள்ளார். முதல் நாள் இரவில் அமைதியாக இருந்த அவர், அடுத்த நாள் வன்முறையில் இறங்கியுள்ளார்.

காப்பக ஊழியர்களுடன் தங்குவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், உடன் வைத்திருந்த கத்தியால் தாக்குதல் நடத்தியுள்ளார். இந்த தாக்குதலில், காப்பகத்தில் தங்கியிருந்தவர்களில் 12 பேர் காயமடைந்தனர். அவர்களில் 11 பேர் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் சேலம் காவல் துறையினர் உடனடியாக சம்பவ பகுதிக்கு சென்று டோனியை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com