கொரோனா பாதிப்பு; உலகளவில் அமெரிக்கா முதலிடம்

கொரோனா வைரசின் பிறப்பிடமான சீனாவை விட, அமெரிக்காவில் அந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்பு; உலகளவில் அமெரிக்கா முதலிடம்
Published on

வாஷிங்டன்,

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் பரவியுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. உலகம் முழுவதும் இதுவரை 5 லட்சத்து 29 ஆயிரத்து 614 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. இவர்களில் இதுவரை 23 ஆயிரத்து 976 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 3 லட்சத்து 82 ஆயிரத்து 258 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 976 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் சீனா, ஐரோப்பிய நாடுகளை தொடர்ந்து தற்போது அமெரிக்காவில் நிலை கொண்டுள்ளது. அந்நாட்டில் வைரஸ் பயங்கர வேகத்தில் பரவி வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் புதிதாக 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டில் வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 85 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

மேலும், வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் மட்டும் 260-க்கும் மேற்பட்டோர் பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அமெரிக்காவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆயிரத்து 1295-ஆக அதிகரித்துள்ளது. இதற்கிடையில், கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் முண்ணனியில் இருந்த சீனா, இத்தாலியை பின்னுக்கு தள்ளி அமெரிக்கா முதலிடம் வகிக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com