இஸ்லாமிய நாடுகளை சேர்ந்த பயணிகள் அமெரிக்காவிற்குள் நுழைய தடை அமலாகியது

ஆறு இஸ்லாமிய நாடுகளை சேர்ந்த பயணிகள் அமெரிக்காவிற்குள் நுழைய தடை அமலாகியது
இஸ்லாமிய நாடுகளை சேர்ந்த பயணிகள் அமெரிக்காவிற்குள் நுழைய தடை அமலாகியது
Published on

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் சர்ச்சைக்குரிய பயண தடை அமலாகியுள்ள நிலையில், ஆறு பிரதான இஸ்லாமிய நாடுகளிலிருந்து வரும் பயணிகள் மற்றும் அனைத்து அகதிகளும் தற்போது கடுமையான நுழைவு விதிகளை எதிர்கொள்ளவேண்டியுள்ளது.

6 முஸ்லிம் நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்க விசா வேண்டி விண்ணப்பித்தால், அவர்களது பெற்றோர், வாழ்க்கை துணைவர் அல்லது துணைவி, குழந்தை, மகன், மகள், மருமகன், மருமகள், உடன்பிறந்தவர்கள் ஆகிய உறவுகளில் ஒருவர் அமெரிக்காவில் இருப்பதை நிரூபித்தாக வேண்டும். டிரம்ப் நிர்வாகம் இந்த புதிய விதிமுறையை அறிமுகம் செய்துள்ளது.

இந்த தடையின் கீழ், அகதிகள் மற்றும் குறிப்பிட்ட இஸ்லாமிய நாடுகளில் இருந்து வரும் பயணிகள், அமெரிக்காவில் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் அல்லது வணிக ரீதியாக தொடர்புகள் இல்லாமல் இருந்தால், அமெரிக்காவுக்குள் நுழைய விசா மறுக்கப்படலாம் அல்லது அவர்களுக்கு அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்படலாம்.

ஈரான், லிபியா, சிரியா, சோமாலியா, சூடான் மற்றும் ஏமன் ஆகிய நாட்டு மக்கள் மற்றும் அனைத்து அகதிகளுக்கும் இந்த விதிகள் பொருந்தும்.

இந்த புதிய பயண தடை அமலாகிய வாஷிங்டன் நேரம் 20:00 மணிக்கு( இந்திய நேரப்படி காலை 5.30 மணி) சிறிது நேரத்திற்கு முன், பெடரல் நீதிபதியிடம் ஹவாய் அரசு விளக்கம் கேட்டதாகத் தெரிய வந்தது .

கடந்த காலத்தில் ஹவாய் அரசு, அமெரிக்க அரசாங்கம், உச்ச நீதிமன்ற உத்தரவுகளை மீறி முறையற்ற வகையில் மக்களைத் தவிர்த்து என குற்றம் சாட்டியது.

இந்த வாரத்தொடக்கத்தில், உச்ச நீதிமன்றம் தடையை பாதியளவு உறுதிப்படுத்தி, ஆனால் , அதில் முடக்கப்பட்டிருந்த அதிபரின் முக்கிய கொள்கைகளில் ஒன்றின் மீதான தடை விலக்கியது.

ஆறு வரையறுக்கப்பட்ட ஆறு நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு வரும் பயணிகள் மற்றும் அகதிகள் அமெரிக்காவில் தங்களுடைய குடும்ப உறுப்பினர் ஒருவர் உள்ளார் என்பதை நிரூபிக்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

உச்சநீதிமன்றம் அக்டோபரில் தடை மீதான இறுதி முடிவை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com