

பாக்தாத்,
தொடர்ந்து பாதுகாப்பு படைகளை குறி வைத்து தாக்குதல்களை நடத்தி வருகிற ஐ.எஸ். பயங்கரவாதிகளை கட்டுப்படுத்த முடியாமல் இந்த படைகள் திணறி வருகின்றன.
இந்த நிலையில் அன்பார் மாகாணத்தில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் சொர்க்கம் என கருதப்படக்கூடிய அன்னா நகரத்தில் அமெரிக்க கூட்டுப்படைகள் அதிரடியாக குண்டு மழை பொழிந்தன.
இந்த வான் தாக்குதலில் 20 ஐ.எஸ். பயங்கரவாதிகள் உயிரிழந்தனர்.
இது தொடர்பாக ஈராக்கின் ஜசிரா செயல்பாடுகள் பிரிவின் தலைவர் காசிம் முகமதி நேற்று கூறுகையில், ஐ.எஸ். பயங்கரவாதிகளின் சொர்க்கமாக கருதப்படக்கூடிய அன்னா நகரத்தில் கூட்டுப்படைகள் நடத்திய குண்டுவீச்சில் 20 பேர் கொல்லப்பட்டனர். அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் மனித கேடயங்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். அதற்கு மத்தியில் இந்த குண்டுவீச்சு நடந்துள்ளது என்று குறிப்பிட்டார்.