கொரோனா வைரஸ் பீதிக்கு மத்தியில் அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரக படைகள் கூட்டு ராணுவ பயிற்சி

கொரோனா வைரஸ் பீதிக்கு மத்தியில் அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரக படைகள் கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டன.
கொரோனா வைரஸ் பீதிக்கு மத்தியில் அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரக படைகள் கூட்டு ராணுவ பயிற்சி
Published on

அபுதாபி,

ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியது முதல் இருநாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு நீடிக்கிறது.

இந்த விவகாரத்தில் மத்திய கிழக்கு நாடுகளான சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பல நாடுகள் ஈரானுக்கு எதிராக உள்ளன. இதன் காரணமாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இதனிடையே உயிர்க்கொல்லி கொரோனா வைரசால் ஈரான் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் ஈரானுடனான பதற்றம் மற்றும் கொரோனா வைரஸ் பீதிக்கு மத்தியில் அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு அமீரக படைகள் நேற்று முன்தினம் கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டன.

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபுதாபியில் உள்ள ஹமாரா ராணுவ தளத்தில் இந்த பயிற்சி நடைபெற்றது. இரு நாட்டு படைகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். இரு நாட்டு படைகளின் போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் கப்பல்கள் பயிற்சியில் ஈடு படுத்தப்பட்டன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com