அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் நாடு திரும்பினார்


அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் நாடு திரும்பினார்
x

அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் மற்றும் அவரது மனைவி ஆக்ராவில் தாஜ்மகாலை கண்டு ரசித்தனர்.

வாஷிங்டன்,

அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் 4 நாள் பயணமாக கடந்த 21-ந்தேதி இந்தியா வந்தார். முதலில் டெல்லியில் அக்ஷர்தாம் கோவிலில் சாமி தரிசனம் செய்த அவர், பின்னர் பிரதமர் மோடி மற்றும் தலைவர்களை சந்தித்தும் பேச்சுவார்த்தை நடத்தினார். டெல்லியில் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு ராஜஸ்தானுக்கு ஜே.டி.வான்ஸ் குடும்பத்துடன் சென்றார். அங்கே ஜெய்ப்பூரில் உள்ள ஆம்பர் கோட்டையை 22-ந்தேதி சுற்றிப்பார்த்த அவர்கள், மேலும் பல இடங்களை பார்வையிட்டனர்.

பின்னர் நேற்று ஆக்ராவில் தாஜ்மகாலை கண்டு ரசித்தனர். பின்னர் மீண்டும் அவர்கள் ஜெய்ப்பூர் திரும்பினர். அங்கே மேலும் சில நிகழ்வுகளில் அவர்கள் கலந்து கொண்டனர்.இதைத்தொடர்ந்து அவர்கள் இந்தியாவில் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு இன்று நாடு திரும்பினர். 4 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு சிறப்பு விமானம் மூலம் ஜெய்ப்பூரில் இருந்து அமெரிக்கா புறப்பட்டு சென்றனர்.

1 More update

Next Story