அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிசுக்கு கொரோனா பாதிப்பு..!!

அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிசுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
Image Courtesy: AFP
Image Courtesy: AFP
Published on

வாஷிங்டன்,

அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தடுப்பூசி காரணமாக அந்நாட்டில் வைரஸ் பரவல் மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.

இந்நிலையில், அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிசுக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. துணை ஜனாதிபதி கமலா ஹாரிசுக்கு எந்த அறிகுறிகளும் இல்லை என்றும் அவர் ஜனாதிபதி ஜோ பைடன் நெருங்கிய தொடர்பில் இல்லை என்றும் வெள்ளைமாளிகை தெரிவித்துள்ளது.

அந்நாட்டு ஊடகங்களில் வெளியான அறிக்கையின்படி, கொரோனா பாதிப்பு கமலா ஹாரிசுக்கு எந்த அறிகுறிகளையும் வெளிப்படுத்தவில்லை, அவர் தனிமைப்படுத்தப்பட்டு துணை ஜனாதிபதியின் இல்லத்தில் இருந்து தொடர்ந்து பணியாற்றுவார். தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள ஹாரிஸ் தற்போது நலமுடன் உள்ளார். கொரோனா வழிகாட்டுதல்கள் மற்றும் மருத்துவர்களின் ஆலோசனையைப் பின்பற்றும் அவர், உறுதியான பரிசோதனைக்கு பின்னர் வெள்ளை மாளிகைக்குத் திரும்புவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

57 வயதான கமலா ஹாரிஸ், மாடர்னா கொரோனா தடுப்பூசியின் முதல் டோசை பதவியேற்கும் சில வாரங்களுக்கு முன்பும், இரண்டாவது டோஸ் 2021 இல் பதவியேற்ற சில நாளுக்குப் பிறகும் பெற்றார். தொடர்ந்து அக்டோபர் மாத இறுதியில் ஒரு பூஸ்டர் டோசையும், ஏப்ரல் 1 அன்று கூடுதல் பூஸ்டர் டோசையும் அவர் செலுத்திக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com