தந்தையர் தின விழாவில் சோகம்.. பழங்கால விமானம் விழுந்து நொறுங்கி 2 பேர் பலி

விமான விபத்து தொடர்பாக மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் மற்றும் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரிய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
vintage plane crahses during fathers day event
Published on

வாஷிங்டன்:

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் தெற்கு பகுதியில் உள்ள சினோ விமான நிலைய வளாகத்தில், யாங்க்ஸ் விமான அருங்காட்சியகம் உள்ளது. இங்கு பழங்காலத்தைச் சேர்ந்த பல்வேறு விமானங்கள் பராமரிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் தந்தையர் தினத்தை முன்னிட்டு இந்த அருங்காட்சியகத்தில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பழங்கால விமானங்கள் இயக்கப்பட்டன. அதில் ஒரு விமானம் விபத்துக்குள்ளானது. இரட்டை என்ஜின் கொண்ட லாக்ஹீட் 12ஏ என்ற அந்த விமானம், புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்தில் விமானியின் கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து தீப்பிடித்தது. இதில் விமானத்தில் பயணித்த இரண்டு விமானிகளும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம், தந்தையர் தின விழாவில் பங்கேற்றவர்களை சோகத்தில் ஆழ்த்தியது. விபத்தைத் தொடர்ந்து அருங்காட்சியகம் தற்காலிகமாக மூடப்பட்டது.

விபத்து தொடர்பாக மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் மற்றும் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரிய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com