வட கொரியாவுடனான சீன வர்த்தகம் குறித்து அமெரிக்கா எச்சரிக்கை

ஐக்கிய நாடுகள் சபையில் சீனாவிற்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வட கொரியாவுடனான சீன வர்த்தகம் குறித்து அமெரிக்கா எச்சரிக்கை
Published on

ஐநாசபை

ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே சபையில் பேசும்போது சீனா அமெரிக்காவுடனான மிகப் பெரிய வர்த்தகத்தை கருத்தில் கொண்டால் ஐநா தடையை மீறி வட கொரியாவுடன் வர்த்தகத்தை மேற்கொள்ளக்கூடாது என்று எச்சரித்தது.

புதனன்று சபையில் நடைபெற்ற அவசரக்கால உரையின்போது நிக்கி ஹாலே இவ்வாறு கூறினார். வட கொரியா வெற்றிகரமாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதித்தப்பின்னர் இந்தக் கூட்டம் அமெரிக்காவின் கோரிக்கையின்படி கூட்டப்பட்டது.

ஹாலே பேசுகையில் உலகம் ஆபத்தான பகுதியாக மாறிவிட்டது. அமெரிக்கா தனது ராணுவத்தை பயன்படுத்தலாம். ஆனால் அதற்கு பதிலாக வர்த்தகத்தைப் பயன்படுத்த விரும்புகிறது. ஐநாவின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்தும் பெரும்பங்கு சீனாவிடமேயுள்ளது. வட கொரியாவின் 90 சதவீத வர்த்தகம் சீனாவிடமிருந்தே நடைபெறுகிறது என்றார்.

டிரம்ப் அரசு சீனாவுடனோ வேறு எந்த நாட்டுடனோ செயலாற்றும் ஆனால் கடந்த காலத்தின் அரைகுறை அணுகுமுறைகளை திரும்பவும் செய்ய நினைக்காது என்றார் ஹாலே.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com