‘தடுப்பூசியில் இந்தியா மாபெரும் சக்தி’ - அமெரிக்கா ஒப்புதல்

தடுப்பூசி தயாரிப்பில் இந்தியாவுடனான அமெரிக்காவின் பணி, மக்களின் உயிர்களைக் காப்பாற்றுகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

வாஷிங்டன்,

அமெரிக்காவின் சர்வதேச மேம்பாட்டு நிதி கழகம், அந்த நாட்டின் மேம்பாட்டு வங்கி ஆகும். இது உலகமெங்கும் பல்வேறு நாடுகளில் முதலீடுகளை செய்கிறது. இதன் தலைமைச்செயல் அதிகாரி டேவிட் மார்சிக், உயர்மட்ட தூதுக்குழுவுடன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இந்தியா வருகிறார். 26-ந் தேதி வரை இங்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

இவர் இந்தியா வரும் நிலையில், கொரோனா தடுப்பூசி உற்பத்தியில் இந்தியா பெரும் சக்தியாக திகழ்கிறது என்பதை ஒப்புக்கொண்டுள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, இந்தியா தடுப்பூசியில் மாபெரும் சக்தி ஆகும். அந்த நாட்டுடன் அமெரிக்காவின் பணி, மக்களின் உயிர்களைக் காப்பாற்றுகிறது. 2.3 பில்லியன் டாலருக்கும் அதிகமான (சுமார் ரூ.17 ஆயிரத்து 250 கோடி) எங்களது முதலீட்டில் இந்தியா மிக முக்கியமான, மிகப்பெரிய கூட்டாளி நாடு ஆகும் எனவும் குறிப்பிட்டார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com