அமெரிக்கா: கார் பார்க்கிங்கில் காதலி சுட்டு கொலை; கூலாக ஷாப்பிங் செய்த சீக்கிய வாலிபர்...

அமெரிக்காவில் கார் பார்க்கிங்கில் சீக்கிய வாலிபர் தனது காதலியை சுட்டு கொன்று விட்டு கூலாக ஷாப்பிங் செய்தது தெரிய வந்துள்ளது.
அமெரிக்கா: கார் பார்க்கிங்கில் காதலி சுட்டு கொலை; கூலாக ஷாப்பிங் செய்த சீக்கிய வாலிபர்...
Published on

நியூயார்க்,

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ரோஸ்வில்லே பகுதியில் வணிக வளாகம் ஒன்று உள்ளது. இதில் வாகனங்களை நிறுத்தும் இடத்தில் சிம்ரன்ஜித் சிங் என்ற சீக்கிய வாலிபர் (வயது 29) ஒருவர் தனது காதலியுடன் (34 வயது) தகராறில் ஈடுபட்டு உள்ளார்.

இதில், ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அந்த நபர், காதலியை துப்பாக்கியால் சுட்டு கொன்றார். பின்னர் அதே இடத்தில் துப்பாக்கியை போட்டு விட்டு தப்பியுள்ளார்.

இதுபற்றி வெளியான செய்தி அறிக்கையில், சிங் சம்பவத்திற்கு பின்னர் ஷாப்பிங் செய்து, பணம் கொடுத்து சட்டை ஒன்றை வாங்கியுள்ளார். பின்பு புதிய சட்டையை போட்டு கொண்டு, பழைய சட்டையை தனது பையில் மறைத்து வைத்து கொண்டார்.

துப்பாக்கி சூடு நடந்தது தெரிய வந்ததும், அந்த பகுதியில் ஊரடங்கு நிலை ஏற்பட்டது. போலீசார் பாதுகாப்பு வளையம் ஏற்படுத்தி குற்றவாளியை தேடினர். ஆனால் சிங், வணிக வளாகத்தில் இருந்து வெளியே போக வேண்டும் என கூறியுள்ளார்.

சாட்சிகள் மற்றும் கடைசியாக தாக்குதலில் ஈடுபட்ட நபர் சென்ற திசை உள்ளிட்ட பிற விவரங்கள் ஆகியவற்றை கொண்டு போலீசார், சிங்கை தேடி வந்தனர். இதன்பின் கண்காணிப்பு கேமரா உதவியுடன் சிங்கை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com