அமெரிக்கா: புளோரிடாவில் கரையை கடந்த சூறாவளி புயல்.. 4 பேர் பலி

புயலின் கோரத்தாண்டவத்தால் வீடுகளின் மீது ராட்சத மரங்கள் முறிந்து விழுந்ததில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அமெரிக்கா: புளோரிடாவில் கரையை கடந்த சூறாவளி புயல்.. 4 பேர் பலி
Published on: 

வாஷிங்டன்,

அமெரிக்காவின் தென்கிழக்கு மாகாணங்களில் எப்போதும் இல்லாத அளவுக்கு இயற்கையின் சீற்றம் மக்களைக் நிலைகுலையச் செய்துள்ளது. புளோரிடா கடற்கரைப் பகுதியில் மணிக்கு 168 கி.மீ வேகத்தில் ஆக்ரோஷமாக கரையை கடந்த 'இசையாஸ்' சூறாவளிப் புயல், பெரும் அழிவை ஏற்படுத்திவிட்டு தற்போது பலவீனமடைந்துள்ளது.

புயலின் கோரத்தாண்டவத்தால் வீடுகளின் மீது ராட்சத மரங்கள் முறிந்து விழுந்ததில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். புளோரிடா. அலபாமா உள்பட 4 மாகாணங்களில் மின்கம்பங்கள் வேரோடு சாய்ந்ததால், சுமார் 6 லட்சத்து 70 ஆயிரம் மக்கள் மின்சாரம் இன்றி இருளில் தவித்து வருகின்றனர். சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளதுடன், பென்சகோலா விமான நிலையமும் சேதமடைந்து மூடப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டு, 16 ஆயிரம் மின் ஊழியர்கள் போர்க்கால அடிப்படையில் சீரமைப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். புயல் பாதிப்பால் ஏற்பட்டுள்ள எரிசக்தி தட்டுப்பாட்டைச் சமாளிக்க, 40 லட்சம் பேரல் கச்சா எண்ணெயை அவசரகால இருப்பிலிருந்து வெளியிட டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com