அமெரிக்கா: கேளிக்கை விடுதியில் துப்பாக்கி சூடு; 6 பேர் படுகாயம்

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
அமெரிக்கா: கேளிக்கை விடுதியில் துப்பாக்கி சூடு; 6 பேர் படுகாயம்
Published on

வாஷிங்டன்,

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஹூஸ்டன் நகரில் உள்ள இரவு நேர கேளிக்கை விடுதி ஒன்றில் விடுமுறையை முன்னிட்டு சிறப்பு இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின்போது இருதரப்பினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரம் அடைந்த ஒரு தரப்பினர் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர். இதனை கண்ட அங்கிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடினர்.

இந்த துப்பாக்கி சூட்டில் 6 பேருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. உடனே தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். போலீசாரின் வருகையை அறிந்ததும் குற்றவாளிகள் தப்பி ஓடி விட்டனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

சிகிச்சையில் 4 பேரின் உடல்நிலை ஆபத்தான நிலையில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அதிகாலை 3 மணியளவில் நடந்ததாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com