

ஜெனீவா,
உலக சுகாதார நிறுவனத்தின் தடுப்பூசி நிபுணர் டாக்டர் கேட் ஓ பிரையன் கூறியதாவது:-
குழந்தைகளுக்கும், வளரும் பருவத்தினருக்கும் தடுப்பூசிகளை அங்கீகரித்து வருகிற பணக்கார நாடுகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால், குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதை உலக சுகாதார நிறுவனம் முன்னுரிமையாக கருதவில்லை.
குழந்தைகள் பொதுவாக கடுமையான நோய்க்கு ஆளாவதோ, அவற்றால் இறப்பதோ இல்லை. குழந்தைகளுடன் தொடர்பில் உள்ள பெரியவர்களுக்கு தடுப்பூசி போட்டுவிட்டால், குழந்தைகளை மீண்டும் பள்ளிக்கூடத்துக்கு அனுப்புவதற்கு முன்பாக அவர்களுக்கு தடுப்பூசி போட வேண்டிய தேவையில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.