

ஸ்டாக்ஹோம்,
உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக உள்ள கொரோனா வைரசின் பாதிப்புகளுக்கு இதுவரை 13 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர். 5.4 கோடி பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனை கட்டுப்படுத்த இதுவரையில் தடுப்பு மருந்துகள் கண்டறியப்படவில்லை.
எனினும், பல்வேறு நாடுகள் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு உள்ளன. அதில், ஓரளவு முன்னேற்றமும் காணப்படுகிறது என கூறப்படுகிறது.
இந்த நிலையில், உலக சுகாதார அமைப்பு பொது இயக்குனர் டெட்ரோஸ் அதானம் கெபிரியேசஸ் கூறும்பொழுது, கொரோனா வைரசின் தொற்றை தடுத்து நிறுத்த தடுப்பு மருந்து மட்டுமே போதியது இல்லை என கூறினார்.
தொடக்கத்தில், சுகாதார பணியாளர்கள், வயது முதிர்ந்தோர் மற்றும் ஆபத்தில் உள்ள பிறருக்கு தடுப்பு மருந்துகளை வழங்குவதற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை குறையும். சுகாதார அமைப்பும் நல்ல முறையில் இருக்கும் என கூறினார்.