ஒமைக்ரான் அச்சத்தால் தடுப்பூசி பதுக்கப்படும் அபாயம்..! உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

ஒமைக்ரான் பற்றிய அச்சத்தால் தடுப்பூசி பதுக்கப்படும் அபாயம் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

ஜெனீவா,

உலக சுகாதார அமைப்பின் நிபுணர்கள் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. அதன்பிறகு அந்த அமைப்பின் தடுப்பூசி துறை தலைவர் டாக்டர் கேத் ஓ பிரையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது பேசிய அவர், பல மாதங்களாக தடுப்பூசி வினியோகம் தடைபட்ட நிலையில், கடந்த 2 மாதங்களாகத்தான் ஏழை நாடுகளுக்கு தடுப்பூசி சீராக கிடைத்து வருகிறது. அனைவருக்கும் தடுப்பூசி கிடைத்தால்தான் கொரோனாவை ஒழிக்க முடியும்.

ஆனால், ஒமைக்ரான் தொற்று பற்றிய அச்சத்தால், தடுப்பூசி வினியோகம் மீண்டும் தடைபடும் என்று அஞ்சுகிறோம். ஏனென்றால், பணக்கார நாடுகள் தங்கள் தேவைக்கு மேற்பட்ட தடுப்பூசிகளை பதுக்கி வைக்கும் அபாயம் உள்ளது.

இதனால் மற்ற நாடுகளுக்கு தடுப்பூசி கிடைக்காமல், அங்கு பரவல் அதிகரித்து, உருமாறிய வைரஸ்கள் உருவாக வழிவகுக்கும். மேலும், 3-வது தவணை தடுப்பூசி போடுவதாலும், மற்ற நாடுகளுக்கு தடுப்பூசி கிடைக்காத நிலை ஏற்படும் என்று அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com