கன்டெய்னர் லாரி மீது வேன் மோதல்: இலங்கையில் 3 இந்தியர்கள் பலி

இலங்கையில் கன்டெய்னர் லாரி மீது வேன் மோதிய விபத்தில் சிக்கி 3 இந்தியர்கள் பலியாயினர்.
கன்டெய்னர் லாரி மீது வேன் மோதல்: இலங்கையில் 3 இந்தியர்கள் பலி
Published on

கொழும்பு,

இலங்கை தலைநகர் கொழும்பு தெற்கு எக்ஸ்பிரஸ் சாலையில் நேற்று முன்தினம் இரவு இந்தியாவை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் வேனில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது வேன் எதிர்பாராதவிதமாக முன்னால் சென்ற கன்டெய்னர் லாரி மீது மோதியது. இதில் இந்தியாவை சேர்ந்த 44 வயதுடைய பெண், அவரது 18 வயது மகன் மற்றொரு உறவினர் ஆகிய 3 பேர் அந்த இடத்திலேயே இறந்தனர். பெண்ணின் கணவரும், 10 வயது மகளும் காயம் அடைந்து கரபிதியா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த விபத்தில் இலங்கையை சேர்ந்த வேன் டிரைவரும் இறந்தார். இறந்தவர்களின் பெயர் விவரம் உடனடியாக தெரியவில்லை. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com