புற்றுநோய் அறுவை சிகிச்சை நிறைவு: போப் லியோ மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ்

கிறிஸ்தவ கத்தோலிக்க திருச்சபைகளின் தலைவராக போப் 14ம் லியோ திகழ்கிறார்
புற்றுநோய் அறுவை சிகிச்சை நிறைவு: போப் லியோ மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ்
Published on: 

வாடிகன் சிட்டி,

போப் 14ம் லியோவுக்கு நடைபெற்ற புற்றுநோய் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவு பெற்றது.

கிறிஸ்தவ கத்தோலிக்க திருச்சபைகளின் தலைவராக போப் 14ம் லியோ திகழ்கிறார். 71 வயதான போப் 14ம் லியோவுக்கு நுரையீரலில் புற்றுநோய் கட்டி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போப் லியோவுக்கு புற்றுநோய் சிகிச்சை அளிக்கப்பட்டது. வெற்றிகரமான அறுவை சிகிச்சைக்குப்பின் போல் 14ம் லியோவின் நுரையீரலில் இருந்து புற்றுநோய் கட்டி அகற்றப்பட்டது.

டிஸ்சார்ஜ்

இந்நிலையில், புற்றுநோய் அறுவை சிகிச்சை நிறைவடைந்த நிலையில் போப் 14ம் லியோ டாக்டர்கள் கண்காணிப்பில் உள்ளார். அவர் இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று வாடிகன் தெரிவித்துள்ளது. மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படும் போப் 14ம் லியோ நாளை செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் சதுர்க்கத்தில் நடைபெறும் பிரார்த்தனையில் பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com