அமெரிக்காவில் வாகனம்-ரெயில் மோதல்; 2 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வாகனம் மீது ரெயில் மோதியதில் 2 பேர் உயிரிழந்து உள்ளனர்.
அமெரிக்காவில் வாகனம்-ரெயில் மோதல்; 2 பேர் உயிரிழப்பு
Published on

டெக்சாஸ்,

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஹாரிஸ் கவுன்டி வடகிழக்கு பகுதியில் ரெயில் ஒன்று நியூ ஆர்லியன்ஸ் நகரில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் நோக்கி நேற்றிரவு சென்று கொண்டிருந்தது.

ஹூஸ்டன் ரெயில் நிலையத்தில் இருந்து 12 மைல்கள் தொலைவில் ரெயில் வந்தபோது, இரவு 8 மணியளவில் அந்த வழியே சென்ற வாகனம் ஒன்று தண்டவாளத்தில் கடக்க முயன்றபோது, விபத்தில் சிக்கியது.

இதில், ரெயில் பயணிகள் 81 பேருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. எனினும், ரெயில் மோதிய வேகத்தில் வாகனம் தீப்பிடித்து எரிந்துள்ளது. இதில், வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட ஆண் மற்றும் பெண் என இருவர் உயிரிழந்து உள்ளனர். இதனை ஹாரிஸ் கவுன்டியின் ஷெரிப், எட் கொன்சாலஸ் செய்தியாளர்களிடம் உறுதி செய்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com