

கராகஸ்,
தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு வெனிசுலா. இந்நாட்டில் கடந்த மாதம் 24ம் தேதி அடுத்தடுத்து 2 பயங்கர நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.
ரிக்டர் அளவில் 7.2 மற்றும் 7.5 என பதிவான இந்த நிலநடுக்கங்களால் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின.
இந்நிலையில், இந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்துள்ளது. அதன்படி, நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,069 ஆக உயர்ந்துள்ளது. மேலும், நிலநடுக்கத்தில் 16,740 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
அதேபோல், நிலநடுக்கத்தால் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
அதேவேளை, நிலநடுக்கம் ஏற்பட்டு 3 வாரங்களை கடந்த நிலையில் மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.