வெனிசுலாவை நிலைகுலைய வைத்த நிலநடுக்கம்: மீட்பு படைகளை அனுப்புகிறது அமெரிக்கா

வெனிசுலாவில் நிலநடுக்கத்தால் உயிரிந்தோர் எண்ணிக்கை 190 ஆக அதிகரித்துள்ளது.
வெனிசுலாவை நிலைகுலைய வைத்த நிலநடுக்கம்: மீட்பு படைகளை அனுப்புகிறது அமெரிக்கா
Published on

சக்திவாய்ந்த நிலநடுக்கம்

அமெரிக்காவில் உள்ள நாடுகளில் வெனிசுலாவும் ஒன்று. இந்த நாட்டில் இந்திய நேரப்படி அதிகாலை 3 மணி அளவில் சக்தி வாய்ந்த இரண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது. 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் பதிவாகியிருந்தது.

இந்த நிலநடுக்கம் காரணமாக வெனிசுலாவின் தலைநகரான கராகஸ் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளும், வணிக வளங்களும் சீட்டுக்கட்டுகள் போல சரிந்து விழுந்தது. அந்த பகுதி முழுவதும் தூசு மண்டலமாக காணப்படுகிறது.

எனவே மக்கள் வீதிகளில் பீதியில் உறைந்து ஓடினார்கள். இடுபாடுகளில் சிக்கிய தங்களின் உறவினர்களை மக்கள் தேடி தவித்து வருகிறார்கள். ஒரு பக்கம் அவர்களை மீட்கும் பணியில் மீட்பு குழுவினரும், தன்னார்வலர்களும் போராடி வருகிறார்கள்.

பலி எண்ணிக்கை உயர்வு

இந்த நிலநடுக்கத்தால் இதுவரை 190 பேர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் பலியானோர் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. 1500த்திற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்திருக்கிறார்கள். நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து விட்டதாக சொல்லப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள வெனிசுவேலா நாட்டுக்குத் தேவையான அத்தியாவசிய உதவிகளைச் செய்ய கத்தார், எல் சால்வேடார் மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் முன்வந்துள்ளன.

இந்த நிலையில், வெனிசுவேலாவில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள அமெரிக்க அரசு மீட்புப் படைகளைக் களமிறக்குவதாக, அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.

இதுபற்றி, பஹ்ரைனில் செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது;-

களம் இறங்கும் அமெரிக்க படை

விர்ஜீனியா, லாஸ் ஏஞ்சலீஸ் உள்ளிட்ட நகரங்களைச் சேர்ந்த மீட்புப் படைகளை நாங்கள் களமிறக்கியுள்ளோம். விரைவில் மேலும் சிலரையும் நாங்கள் சேர்ப்போம். நாங்கள் ஒட்டுமொத்த அரசையும் உள்ளடக்கிய ஒரு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளோம். அவை பெரியதாகவும், விரைவானதாகவும், திறந்தவாய்ந்தவையாகவும் இருக்கும் எனக் கூறியுள்ளலாவின் விமான நிலையம் மிகவும் சேதமடைந்துள்ள நிலையில் அதனை சீரமைக்கத் தேவையான உதவிகளை அமெரிக்க அரசு மேற்கொள்ளும் எனவும் அடுத்த 48 முதல் 72 மணிநேரங்களுக்கு உடனடியாகத் தேவைப்படும் உதவிகள் அனைத்தும் விரைவாக அனுப்பப்படும் எனவும் ரூபியோ தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com