

கராகஸ்,
தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு வெனிசுலா. இந்நாட்டில் கடந்த 24ம் தேதி அடுத்தடுத்து 2 பயங்கர நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.
ரிக்டர் அளவில் 7.2 மற்றும் 7.5 என பதிவான இந்த நிலநடுக்கங்களால் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின.
இந்நிலையில், இந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,500ஐ கடந்துள்ளது. அதன்படி, நிலநடுக்கத்தில் உயிரிழந்தோ எண்ணிக்கை 3,535 ஆக உயர்ந்துள்ளது. மேலும், நிலநடுக்கத்தில் 16,740 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
அதேபோல், நிலநடுக்கத்தால் 17,854 பேர் வீடுகளை இழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.